AHU காற்றை கையாளும் பகுதி வனிக நோக்கில் பயன்படுத்தப்படும் பெரிய HVAC சிஸ்டத்தில் ஏன் முக்கியத்துவத்தைப் பெறுகிறது அதன் பணிகள் என்ன?An Air Handling Unit (AHU) is a critical component in HVAC (Heating, Ventilation, and Air Conditioning) systems, especially in commercial and industrial buildings.

💨 Air Handling Unit (AHU) என்ன?

ஏர் ஹேண்ட்லிங் யூனிட் என்பது ஒரு முக்கியமான HVAC (Heating, Ventilation and Air Conditioning) பகுதி. இது காற்றை வடிகட்டுதல், குளிர்வித்தல்/வெப்பமூட்டல் செய்து, உள்ளே நன்கு காற்றை சுழற்சி செய்யும் பணி வகிக்கிறது. பெரும்பாலும் கமெர்ஷியல் மற்றும் இன்டஸ்ட்ரியல் கட்டிடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது (Indoor Air Quality (IAQ)) காற்றின் தரத்தை பராமரிப்பதோடு எனர்ஜி (Energy Efficiency) திறனை திறமையாக கையாண்டு மின் சேமிப்பை அளிக்கிறது.


🧱 AHU-வில் உள்ள முக்கிய பகுதிகள்:

  1. ப்ளோவர்/ஃபேன் – காற்றை நகர்த்தும் .
  2. ஃபில்ட்டர் – தூசி மற்றும் மாசுபாடுகளை நீக்கும்.
  3. ஹீட்டிங் காயில் – காற்றை வெப்பமாக்கும்.
  4. கூலிங் காயில் – காற்றை குளிர்விக்கும்.
  5. டாம்பர் – காற்றின் ஓட்டத்தை கட்டுப்படுத்தும்.
  6. மிக்சிங் பாக்ஸ் – புது காற்றும் ரிட்டர்ன் காற்றும் தேவையான வகிதத்தில் கலந்து அனுப்பும்.
  7. ஹ்யூமிடிஃபையர் / டிஹ்யூமிடிஃபையர் – ஈரப்பதத்தை சமநிலைப்படுத்தும்.
  8. ட்ரெயின் பான் – குளிர் சுழற்சியில் உருவாகும் தண்ணீரை சேகரிக்கும்.

⚙️ AHU செயல்முறை:


  1. காற்று புகுதல் (Air Intake)
    வெளியிலிருந்து ஃப்ரஸ் ஏர்டக்ட் வழியே புது காற்றும், அறையில் இருந்த ரிட்டர்ன் காற்றும் சக்ஷன் டக்ட் வழியாகவும் AHU-வில் புகுகிறது.
  2. ஃபில்டரிங் (Air Filtration)
    புது காற்று எலக்கட்ரிகல் ஏர்ஃபில்டர்களை கடந்து Pre, HEPA மற்றும் UV ஃபில்டர்கள் மூலம் தூசி மற்றும் கிருமிகளை நீக்குகிறது.
  3. காற்று கலப்பு (Air Mixing)
    மிக்சிங் பாக்ஸ் மூலம் ரிட்டர்ன் காற்றும் புது காற்றும் கலக்கப்படுகிறது.இதனால் குளிர்விக்கும் அறையின் ஆக்ஸிஜன் அளவு சரியான அளவில் பர‍மரிக்கப் படுகிறது
  4. குளிர்வித்தல் அல்லது வெப்பமூட்டல் (Cooling/Heating)
    • கூலிங் காயில் மூலம் காற்று குளிர்விக்கப்படுகிறது.
    • ஹீட்டிங் காயில் மூலம் காற்று வெப்பமாக்கப்படுகிறது.
  5. ஈரப்பதம் கட்டுப்பாடு (Humidity Control)
    தேவைப்பட்டால், ஹ்யூமிடிஃபையர் அல்லது டிஹ்யூமிடிஃபையர் மூலம் காற்றின் ஈரப்பதம் சரிசெய்யப்படுகிறது.
  6. விநியோகம் (Air Distribution)
    ஃபேன் காற்றை டக்ட் மூலம் அறைகளுக்கு அனுப்புகிறது.
  7. ரிட்டர்ன் ஏர் (Return Air)
    பயன்படுத்தப்பட்ட காற்று மீண்டும் AHU-க்கு திரும்பி, மறு சுழற்சிக்கு வரும் அல்லது வெளியேற்றப்படும்.

🧊 AHU வகைகள்:

  • Draw-through AHU – ஃபேன் காயில்களின் பின்னால் இருக்கும்.
  • Blow-through AHU – ஃபேன் காயில்களுக்கு முன்னால் இருக்கும்.
  • Packaged AHU – கூலிங்/ஹீட்டிங் அடங்கிய ஒரே யூனிட்.
  • Modular AHU – தனித்தனி பகுதிகள் சேர்த்து தயாரிக்கப்படும்.
  • இங்கே Air Handling Unit (AHU) மற்றும் அதன் செயல்முறை பற்றி விளக்கும் ஒரு எளிய அனிமேஷன் வீடியோ உள்ளது:https://youtu.be/EjCBc5gl31o
  • AHU-வின் செயல்முறை பற்றிய விரிவான விளக்கத்துடன் கூடிய மற்றொரு வீடியோவும் உள்ளது:https://youtu.be/KCiv8IAUkh8
  • இந்த வீடியோவில் AHU-வின் செயல்முறை மற்றும் அதன் முக்கிய கூறுகள் பற்றி விரிவாக விளக்கப்படுகின்றன. காற்றின் சுழற்சி, வெப்பமூட்டல்/குளிர்வித்தல், ஈரப்பதம் கட்டுப்பாடு மற்றும் காற்று விநியோகம் போன்ற அனைத்து கட்டங்களும் விளக்கப்படுகின்றன.
  • இந்த வீடியோக்கள் AHU-வின் செயல்முறை மற்றும் அதன் முக்கிய கூறுகள் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள உதவும்.

“This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication”

11 thoughts on “AHU காற்றை கையாளும் பகுதி வனிக நோக்கில் பயன்படுத்தப்படும் பெரிய HVAC சிஸ்டத்தில் ஏன் முக்கியத்துவத்தைப் பெறுகிறது அதன் பணிகள் என்ன?An Air Handling Unit (AHU) is a critical component in HVAC (Heating, Ventilation, and Air Conditioning) systems, especially in commercial and industrial buildings.”

Leave a Reply to Whitney803 Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *